உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய் பயிருக்குரிய இழப்பீடு வழங்க கோரி வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

மிளகாய் பயிருக்குரிய இழப்பீடு வழங்க கோரி வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பெருநாழி: -மானாவாரி மிளகாய் பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் இன்சூரன்ஸ் தொகை வழங்கிடக் கோரி பெருநாழியில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் அலுவலக அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருநாழி உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் கடந்த நவ., மாதம் பருவம் தவறிய மழையால் கஞ்சம்பட்டி ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் வெள்ள நீரில் இழுத்துச் சென்று சேதம் ஏற்பட்டது. அதிகாரிகள் ஆய்வுசெய்து கணக்கெடுப்பு நடத்தியும் இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இந்நிலையில் வெள்ள நிவாரணத் தொகை வழங்க கோரி விவசாயிகள் நேற்று காலை 10:00 மணிக்கு பெருநாழி துணை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெருநாழி விளாத்திகுளம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் எருமைகுளம் முருகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர் சுரேஷ் உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி