மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
திருவாடானை: விவசாயிகளுக்கு பயிர் கடன் ஜன.12 வரை வழங்க முடிவு செய்யபட்டுள்ளதால் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவு சார்பதிவாளர் ஆனந்த் கூறினார்.அவர் கூறியதாவது -திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்க 2023-24 ம் ஆண்டிற்கு ரூ.150 கோடி இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது.டிச. வரை ரூ.110 கோடி பயிர் கடன் வழங்கபட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஜன.12., வரை நீட்டிப்பு செய்யபட்டுள்ளது. கடந்த ஆண்டு பயிர்க்கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள், உடனே செலுத்தி புதிய கடன் வாங்கி கொள்ளலாம். பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், 2 போட்டோக்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம். ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை ஜாமின் பேரில் கடன் தொகை வழங்கப்படும் என்றார்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago