மேலும் செய்திகள்
ஏமாற்றியது பருவமழை விவசாயிகள் தவிப்பு
15-Nov-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. புல்லமடை, வல்லமடை, இருதயபுரம், ராமநாதமடை, சவேரியார்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி, வண்டல், எட்டியத்திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.இந்நிலையில் அக்.,ல் விதைப்பு செய்யப்பட்ட மிளகாய் செடிகள் குத்து செடிகளாக உள்ளன. சில பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து நிலவிய சீதோஷ்ண நிலையால் வயல்களில் மிளகாய்ச் செடிகள் நடப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மிளகாய் வயல்களில் விவசாயிகள் தயார் நிலையில் உற்பத்தி செய்து வைத்திருந்த மிளகாய் நாற்றுகளை நடவு செய்து மிளகாய் விவசாயப் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் நெற்பயிர் போன்று மிளகாய் விவசாயத்திற்கு கூடுதல் தண்ணீர் தேவை இல்லாததால் தற்போது மிளகாய் நடவு செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
15-Nov-2024