உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனியார் வியாபாரிகளை நாடும் விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

தனியார் வியாபாரிகளை நாடும் விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

திருவாடானை, : நெல் கொள்முதல் நிலையங்களில் குறைவான விலை நிர்ணயிக்கபட்டதால் விவசாயிகள் தனியாரிடம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 13 நெல் கொள்முதல் நிலையங்களை மூட முடிவு செய்யபட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இயந்திரம் மூலம் இப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை செய்யபட்ட நெல் மூடைகளை விவசாயிகள் தமிழக அரசு சார்பில் தொடங்கபட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறுவது வழக்கம்.இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டது.சன்ன ரகம் ஒரு கிலோ ரூ. 23.10க்கும், பொது ரகம் ரூ.22. 65க்கும் அரசால் விலை நிர்ணயம் செய்யபட்டது. தனியார் வியாபாரிகள் கிலோ ரூ.30 வரை கொள்முதல் செய்வதால் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டினர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் சன்னரகம் ரூ.23.10க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தனியார் வியாபாரிகள் கிலோ ரூ.30 வரை வாங்குகின்றனர். 60 கிலோ எடையுள்ள நெல்லை விற்றால் ரூ.400 வரை லாபம் கிடைக்கிறது. ஆகவே நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கவில்லை என்றனர். நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறியதாவது - மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபட்டது.நெல் வரத்து அதிகமாகும் பட்சத்தில் கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் முடிவு செய்யபட்டது.ஆனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களை நாடாததால் தற்போது 13 கொள்முதல் நிலையங்கள் மூட முடிவு செய்யபட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்