போட்டோ பிரேம் கடையில் தீ விபத்து
பரமக்குடி: பரமக்குடி பெரிய பஜாரில் போட்டோ பிரேம் கடை செயல்படுகிறது. இங்கு பிரேம்கள் உள்பட டெக்கரேஷன் பொருட்கள் உள்ளன. நேற்று காலை கடை திறக்கப்பட்டது. 11:30 மணிக்கு மாடியில் பழைய பொருட்கள் வைக்கும் அறையில் தீ பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசார் விசாரணையில், குழந்தைகள் மாடியில் வெடி வெடித்ததால் தீ பிடித்திருக்கலாம் என தெரிவித்தனர். விபத்தில் உயிர் சேதமோ, அதிகமான பொருள் சேதமோ ஏற்படவில்லை. புகைமூட்டம் அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த தனியார் பள்ளிக்கு மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது.