உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைக்கோலுக்கு தீ வைக்காதீங்க தீயணைப்புத்துறை அறிவுரை

வைக்கோலுக்கு தீ வைக்காதீங்க தீயணைப்புத்துறை அறிவுரை

திருவாடானை, :விவசாயிகள் வயல்களுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் அறிவுரை வழங்கினர்.திருவாடானை பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் நடக்கிறது. இயந்திரம் மூலம் அறுவடை செய்யபட்ட வயல்களில் தேங்கும் வைக்கோலில் சிலர் தீ வைக்கின்றனர். இத்தீயால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.கடந்த ஆண்டு வயல்களில் தீ வைத்த போது பாண்டுகுடி வயல்காட்டில் ஆட்டுக்கிடைக்குள் தீ பரவி 18 ஆடுகள் இறந்தன.நேற்று முன்தினம் பெருவாக்கோட்டை காளிமுத்து 87, உடலில் தீப்பற்றி பலியானார். தீ குடியிருப்புக்குள்ளும் பரவ வாய்ப்புள்ளது. தீயணைப்புத் துறையினர் கூறியதாவது:வயல்களில் விவசாயிகள் தீ வைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் வயல் ஓரங்களில் உள்ள குடியிருப்பு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே வயல்களில் வைக்கோலுக்கு தீ வைப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என்றனர்.வேளாண் அலுவலர்கள் கூறுகையில், மண் வளம் பெருக மண் புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. பயிர் வளர மண் புழுக்கள் ஊக்கியாக செயல்படுகின்றன.வயலில் தீ வைப்பதால் மண்புழுக்கள் முற்றிலும் அழிந்து விடும். ஆகவே விவசாயிகள் வயலுக்கு தீ வைக்க வேண்டாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை