மீனவருக்கு தடை
தொண்டி: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொண்டி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொண்டி மீன்வள சார்பு ஆய்வாளர் அய்யனார் கூறுகையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் தாழ்வு மண்டலத்தால் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இது குறித்து கடலோர பகுதிகளில் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.