நடுக்கடலில் கேக் வெட்டி பிரதமருக்கு மீனவர்கள் நன்றி
ராமநாதபுரம்:மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, பாம்பன் புதிய ரயில் பாலம் 5 மீ., உயரத்தில் கட்டப்பட்டதால், நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் கேக் வெட்டி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.பழைய பாம்பன் பாலம் கடல் மட்டத்தில் இருந்து 3 மீ., உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நாட்டுப்படகுகள் இந்த பாலத்தை கடக்க முடியாமல் சிரமப்பட்டன. படகுகள், பாலத்தில் பலமுறை சிக்கியுள்ளன. புதிய பாம்பன் பாலம் அமைத்த போது, உயரத்தை அதிகரிக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று புதிய பாம்பன் பாலம், 5 மீ., உயரத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ளது. பாலம் மூடியிருக்கும் நிலையில் நாட்டுப்படகுகள் எளிதில் பாலத்தை கடந்து செல்ல முடிகிறது. மேலும், 2019 முதல் மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி, அமைச்சரையும் மோடி நியமித்துள்ளார்.பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மீனவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய பாரம்பரிய மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள், புதிய பாம்பன் பாலத்தின் கீழ் நடுக்கடலில் படகில் கேக் வெட்டி கொண்டாடினர்.