உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு; மீனவர்கள் சங்கம் முடிவு

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு; மீனவர்கள் சங்கம் முடிவு

ராமேஸ்வரம் : -இலங்கை நீதிமன்றத்தில், ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து, கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க முடிவு செய்தனர்.நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க தலைவர் சகாயம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பிப்., 16ல் ராமேஸ்வரம் மீனவர்கள் ராபர்ட், பெக்கர் ஆகியோருக்கு ஆறு மாத சிறையும், மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது.நான்கு மாதங்களுக்கு முன் இலங்கை கடற்படை கைது செய்த மீனவர் நம்புமுருகனுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனையை இலங்கை நீதிமன்றம் விதித்து சிறையில் அடைத்தது. இச்சம்பவம் தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நான்கு மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்கக் கோரி, பிப்., 23ல் துவங்கும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பது, பிப்., 20ல் ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஒப்படைப்பது என, தீர்மானம் நிறைவேற்றினர்.சிறையில் வாடும் மீனவர் குடும்பத்தினர் உட்பட மீனவர்கள் பலர் ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதற்கிடையே, -கச்சத்தீவு விழாவுக்கு திட்டமிட்டபடி நாட்டுப்படகில், 178 மீனவர்கள் செல்வோம் என, கச்சத்தீவு பாரம்பரிய நாட்டுப்படகு பயணக் குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை