உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரத்தில் தடை மீறி இரட்டை மடியில் மீன்பிடிப்பு

 ராமேஸ்வரத்தில் தடை மீறி இரட்டை மடியில் மீன்பிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதால், மீன் வளம் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. மீன்வளம், கடல் வளத்தை அழிக்கக்கூடிய இரட்டைமடி வலையில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால சீசனில் ராமேஸ்வரம் பகுதியில் தடையை மீறி, இரட்டை மடியில் மீன் பிடிப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி, இந்தாண்டு சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பனில் உள்ள மீனவர்கள் இரு விசைப்படகுகளை இணைத்து இரட்டை மடியில் மீன்பிடிக்கின்றனர். அவ்வாறு, நேற்று மீன்பிடித்து கரை திரும்பிய ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில், டன் கணக்கில் பேச்சாலை, சூடை, காரல் மீன்கள் சிக்கின. இவற்றை கிலோ 17 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்ள மீன் அரவை ஆலைகளுக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ