உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அழகப்பா பல்கலை கல்லுாரிகள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி

அழகப்பா பல்கலை கல்லுாரிகள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி

கீழக்கரை: கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் தனித்தனியாக மோதின. போட்டிகளை ராமநாதபுரம் மாவட்ட கால்பந்தாட்ட சங்கத் தலைவர் ராஜா நாகேந்திர சேதுபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அழகப்பா அரசு கலைக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார், முகம்மது சதக் அறக்கட்டளை சி.இ.ஓ., விஜயகுமார், கல்லுாரி முதல்வர் ராஜசேகர், போட்டி ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், தவசலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆண்கள் பிரிவில் காரைக்குடி அழகப்பா பல்கலை பி.எட்., கல்லுாரி முதலிடத்தையும், வித்யாகிரி கல்லுாரி புதுவயல் இரண்டாமிடத்தையும், செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.பெண்கள் பிரிவில் காரைக்குடி அழகப்பா பல்கலை பி.எட்., கல்லுாரி மகளிர் அணி முதலிடத்தையும், தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி இரண்டாமிடத்தையும், சிவகங்கை அரசு கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை