மேலும் செய்திகள்
வலையில் சிக்கிய ஆமை மீட்பு
21-Nov-2024
சாயல்குடி: கரைவலை மீன்பிடிப்பில் உயிருடன் சிக்கிய 2 அரிய வகை ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.சாயல்குடி அருகே மேலமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையில் கரைவலையில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் ஏராளமான மீன்கள் உயிருடன் சிக்கி இருந்தன. இந்நிலையில் மீன்களோடு சேர்ந்து அரியவகை பெருந்தலை ஆமை மற்றும் பச்சை ஆமை என 30 கிலோ எடை கொண்ட இரு ஆமைகள் உயிருடன் சிக்கியது. மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமைகளை மீனவர்கள் பாதுகாப்பாக வெளியே எடுத்து மீண்டும் கடலுக்குள் உயிருடன் விட்டனர். மேலமுந்தல் பகுதி மீனவர்கள் கூறியதாவது:மன்னார் வளைகுடாகடல் அரிய வகை உயிரினங்களின் வாழ்விடங்களாக டால்பின், கடல் ஆமை, கடல் பல்லி, கடல் அட்டை, கடல் பசு உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளன. இது போன்ற அரிய வகை உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் கடலோரப்பகுதிகளில் ஏற்படுத்தி உள்ளனர். எனவே அரிய வகை உயிரினங்களை மீண்டும் கடலுக்குள் விடுவது நற்செயலாகும் என்றனர். சாயல்குடி மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகத்தினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மீனவர்களை பாராட்டினர்.
21-Nov-2024