உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடியில் வனத்துறை டோல்கேட் மூடல்

தனுஷ்கோடியில் வனத்துறை டோல்கேட் மூடல்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வனத்துறை டோல்கேட்டில் கட்டணம் வசூலித்த ஊழியர் மீது டூவீலர் மோதி உயிரிழந்ததால் டோல்கேட்டை வனத்துறையினர் மூடினர்.தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் உணவுக் கழிவுகள், பாலிதீன் பைகளை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர். இவை கடலில் விழுந்து அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றன. தனுஷ்கோடி பகுதியை பராமரிக்க சோதனைச் சாவடி அமைக்க வனத்துறை முடிவு செய்தது.2022ல் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வனத்துறையினர் பிளாஸ்டிக் சோதனை சாவடி மையம் அமைத்து தினக்கூலி ஊழியர்களை நியமித்து வாகனத்திற்கு தலா ரூ.20 கட்டணம் வசூலித்தனர்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சோதனைச் சாவடியில் பணிபுரிந்த ஊழியர் ஜெயசூர்யா 23, டூவீலர் மோதி இறந்தார். இவர் மீனவர் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் உறவினர்கள் திரண்டு பாதுகாப்பு கட்டமைப்பு இன்றி கட்டணம் வசூலிக்க கூடாது, இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர்.இதனால் பிரச்னைகளை தவிர்க்க சோதனை சாவடியை வனத்துறையினர் மூடிவிட்டனர். பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திய பின் விரைவில் திறக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ