உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு இலவச அனுமதி

மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு இலவச அனுமதி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் 77ம் ஆண்டு விழாவையொட்டி பிப்.2ல் மக்கள் இலவசமாக பார்வையிடலாம்.மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் பல வகை மீன் குஞ்சுகள் பொறிப்பகம், மீன்களின் அருங்காட்சியகம் கூடம் உள்ளது. இங்கு பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆராய்ச்சி நிலையம் துவக்கி 77ம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பிப்.2ல் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் மீன்கள் பொறிப்பக கூடத்தை காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பொதுமக்கள், மாணவர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மத்திய மீன் ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்