உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குரூப்-2, 2 ஏ முதன்மை  தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப்-2, 2 ஏ முதன்மை  தேர்வுக்கு இலவச பயிற்சி

ராமநாதபுரம்: குரூப்-2, 2 ஏ போட்டித் தேர்வுக்கு தயராகும் இளைஞர்களுக்கு முதன்மை தேர்விற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் நவ.,14 முதல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்-2, 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு செய்துகுருப் -2 ல் 50ம், குரூப் 2 ஏ-ல் 595 காலி பணியிடங்களுக்கான முதல் நிலைதேர்வு செப்.,28 ல் நடந்தது. அடுத்த கட்ட முதன்மைத் தேர்விற்கான இலவச நேரடிபயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நவ.,14 முதல் வார நாட்களில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது புகைப்படம்மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04567 - 230 160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில்பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ