உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயில் இயக்கம்

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயில் இயக்கம்

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ரூ.535 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி துரிதமாக நடக்கிறது. இதில் 1.5 கி.மீ.,ல் பாலம் கட்டுமானப் பணி 100 சதவீதம் முடிந்து விட்டது. மீதமுள்ள 500 மீ.,ல் பாலத்திற்கான துாண்கள் அமைக்கப்பட்டு இதன் வழியாக தற்போது 700 டன் புதிய துாக்கு பாலத்தை நகர்த்தும் பணி நடப்பதால் இதன் கட்டுமானப் பணி நிலுவையில் உள்ளது.ஆறு மாதம் முன் 1.5 கி.மீ., ல் பணி முடிந்து விட்டது. இந்நிலையில் நேற்று மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயில் இன்ஜின் காலியான ஒரு பயணிகள் பெட்டி, சரக்கு பெட்டியில் ராட்சத கிரேனை ஏற்றிக் கொண்டு புதிய பாலத்தில் வந்தது.அதில் நடுப்பாலம் அருகில் கிரேனை இறக்கி விட்டு ரயில் இன்ஜின் பெட்டியுடன் மண்டபம் திரும்பிச் சென்றது. புதிய துாக்கு பாலத்தை பொருத்த இந்த கிரேனை பயன்படுத்த உள்ளதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி