உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் அடிக்கடி பஸ்கள் பிரேக் டவுன்: பயணிகள் அவதி

பரமக்குடியில் அடிக்கடி பஸ்கள் பிரேக் டவுன்: பயணிகள் அவதி

பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் அரசு பஸ்கள் அடிக்கடி பிரேக் டவுன் ஆவதால் பயணிகள் அவதி அடைகின்றனர். மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் பிரதானமாக பரமக்குடி நகர் உள்ளது. இங்கிருந்து நயினார்கோவில், கமுதி மற்றும் சிவகங்கை மாவட்டம் என மக்கள் சென்று வருகின்றனர். இதனால் அனைத்து கோட்டங்களில் இருந்தும் தினமும் பல நுாறு பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் பரமக்குடியில் இருந்து டவுன் பஸ்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து டவுன் பஸ்கள் மற்றும் தொலை துார பஸ்களும் பிரேக் டவுன் ஆகும் நிலை அதிகரித்துள்ளது. நேற்று மதியம் மதுரையில் இருந்து வந்த பஸ் பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் நுழையும் பகுதியில் பிரேக் டவுன் ஆகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் மக்கள் பஸ்சை தள்ளி விட முற்பட்டனர். ஆனால் பஸ் ஸ்டாண்ட் நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களில் ஒரு அடி வரை பள்ளம் உள்ளதால் சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நகர்த்தி கொண்டு சென்றார். இதே போல் பிரேக் டவுன் ஆகி நிற்கும் பஸ்கள் மீண்டும் புறப்பட பல மணி நேரம் ஆகும் சூழலில் மாற்று பஸ்களையும் இயக்க வழின்றி உள்ளது. எனவே அரசு போக்குவரத்து நிர்வாகம் ஊழியர்களை முழுமையாக நியமிப்பத்துடன், பஸ்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ