இறந்த மாணவி குடும்பத்திற்கு நிதி
பரமக்குடி : பரமக்குடி அருகே மேலாய்க்குடியில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பலியான சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. பரமக்குடி அருகே மேலாய்க்குடியை சேர்ந்தவர்கள் பால்ராஜ், விஜயலட்சுமி. இவர்களது மகள் கீர்த்திகா 6, ஒன்றாம் வகுப்பு படித்த நிலையில் நேற்று காலை வீட்டின் மண் சுவர் இடிந்து தலை நசுங்கி பலியானார். இவர்களது குடும்பத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் வழங்கினர்.