கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராமநாதபுரம் : கீழத்துாவல் அருகே புழுதிக்குளத்த்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயராஜ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.கீழத்துாவல் அருகே புழுதிக்குளத்தை சேர்ந்தவர் மோகன் 50. இவரை முன் விரோதத்தில் செப்.,ல் 6 பேர் கும்பல் கொலை செய்தனர். போலீசார் பாலாஜி, கபில்குமார், ஜான்சன், ஜெயராஜ், கலைக்கண்ணன், தவமுருகன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.உச்சிப்புளி பெருங்குளம் மேற்கு தெரு சுந்தரராஜ் மகன் ஜெயராஜ் 25, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சந்தீஷ் எஸ்.பி., கலெக்டர் சிம்ரன்சிங் ஜீத் காலோனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஜெயராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி ஜெயராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.