பள்ளி அருகே எரிக்கப்படும் குப்பை
தேவிபட்டினம்: தேவிபட்டினம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் குப்பை பள்ளி அருகில் கொட்டப்படுவதால் குடியிருப்பு வாசிகளும், மாணவர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்த நிலையில் குப்பை அதிகம் குவியும் போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி அருகே குப்பை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி அருகே குப்பை தீ வைத்து எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.