ராட்சத குழாயில் உடைப்பு: வீணாகிறது காவிரி குடிநீர்
கமுதி: கமுதி -- முதுகுளத்துார் ரோடு பேரையூர் கண்மாய் கரை அருகே ராட்சத குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீணாவதால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் குடிநீரேற்று நிலையத்திலிருந்து ரோட்டோரத்தில் குழாய் அமைக்கப்பட்டு கருங்குளம், பேரையூர்,பாக்குவெட்டி, மருதங்கநல்லுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீர் தரப்படுகிறது. முதுகுளத்துார் - கமுதி ரோடு பேரையூர் கண்மாய் கரை அருகே வரத்து கால்வாய் வழியாக ராட்சத குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் குடிநீர் வீணாகிறது. இதனால் கிராமங் களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சில மாதங் களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு இருந்தது. பேரையூரிலிருந்து கமுதி செல்லும் ரோட்டில் பல இடங்களில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது தொடர் கதையாக உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் இதே போன்று நடைபெறாமல் இருக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.