உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கல்லுாரி பஸ் மீது மோதிய அரசு பஸ்

கல்லுாரி பஸ் மீது மோதிய அரசு பஸ்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த கல்லுாரி பஸ் மீது பிரேக் பிடிக்காததால் பின்னால் வந்த அரசு பஸ் மோதி விபத்திற்குள்ளானது.முதுகுளத்துார் அருகே தனியார் கல்லுாரிக்கு அரசு மருத்துவமனை அருகே மாணவர்களை ஏற்றி செல்வதற்காக கல்லுாரி பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது முதுகுளத்துாரில் இருந்து பரமக்குடிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பின்னால் வந்தது.பஸ்சில் பிரேக் பிடிக்காததால் முன்னால் நின்ற கல்லுாரி பஸ் மீது மோதி யது. இதில் தனியார் பஸ்சின் பின்புறம் சேதமடைந்தது. டவுன் பஸ்சில் முன்பக்கம் கண்ணாடி உடைந்தது. விபத்தில் பொதுமக்கள், மாணவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.இதனால் அரை மணி நேரம் முதுகுளத்துார்- பரமக்குடி ரோட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டது. முதுகுளத்துார் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ