மேலும் செய்திகள்
கீழக்கரை மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை
16-Oct-2024
கீழக்கரை : கீழக்கரை நகரில் மாணவர்கள் நலன் கருதி அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். கீழக்கரையில் 60,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. இங்கு பத்திற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அமைந்துள்ளது.ராமநாதபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கிடைக்கக்கூடிய முறையான சலுகைகள் மற்றும் பயனுள்ள நலத்திட்டங்களை பெற முடியாத நிலை தொடர்ந்து நிலவுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக திருப்புல்லாணி, காஞ்சிரங்குடி, தினைக்குளம், ஏர்வாடி, சிக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றும், விடுதியில் தங்கி கல்வி பயிலும் நிலை உள்ளது. எனவே கீழக்கரையில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும். கீழக்கரையைச் சேர்ந்த மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராஹிம், நிசார் அலி ஆகியோர் கூறியதாவது: 18 ஆண்டுகளுக்கு மேலாக கீழக்கரை நகராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க தொடர்ந்து மனுஅளிக்கிறோம். இதற்கான காரணம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் மனு அளித்துள்ளோம். எனவே தமிழக கல்வித்துறை அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்தால் ஏழை எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றனர்.
16-Oct-2024