பட்டமளிப்பு விழா
பரமக்குடி; பரமக்குடி சோமநாதபுரம் ஸ்ரீ முத்தாலம்மன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லுாரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆயிர வைசிய சபை தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கல்லுாரி சேர்மன் முருகானந்தம் வாழ்த்தினார். இன்ஜினியர் ஜெக நாதன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். துணை சேர்மன் பிரகாசம், பொருளாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பெற்றோர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் காயத்ரி, ஆனந்த ராஜ் ஏற்பாடுகளை செய்த னர். முதல்வர் வெங்க டேசன் நன்றி கூறினார்.