உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அமிர்தா பள்ளியில் குரு பூர்ணிமா விழா

அமிர்தா பள்ளியில் குரு பூர்ணிமா விழா

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் குரு பூர்ணிமா விழா நடந்தது.நேற்று முன்தினம் குரு பூர்ணிமாவையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் விழா நடந்தது. இதில் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த அமிர்தானந்தமயி மடத்தின் சீடர் சித்தானந்தா அமிர்தா சைதன்யா சுவாமி, சத்குரு அமிர்தானந்தாமயி திருவுருவ படத்திற்கு பாத பூஜை செய்தார்.இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் பாதங்களை கழுவி மலர் துாவி பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றனர். இதில் பள்ளி மேலாளர் பிரம்மசாரணி லட்சுமியம்மா, முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை