வெளி மாநிலம் செல்லும் வைக்கோல்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடை பணி நடக்கிறது.நிலத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள வைக்கோல் கால்நடை தீவனத்திற்காக ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகளிடம் வைக்கோல் ஒரு கட்டு ரூ.20க்கும், வாகனம் மூலம் கட்டுவதற்கு ரூ.50 செலவு செய்கின்றனர்.வைக்கோலை கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். கடந்த ஆண்டை கட்டிலும் இந்தாண்டு வைக்கோல் விலை பாதிக்கு மேல் குறைந்துள்ளது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.