உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வைக்கோல் கட்டும் பணி  திருவாடானையில் தீவிரம்

வைக்கோல் கட்டும் பணி  திருவாடானையில் தீவிரம்

திருவாடானை: திருவாடானை பகுதியில் இயந்திரங்கள் மூலம் வைக்கோல் கட்டும் பணிகள் நடக்கிறது.திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் நடந்தது. சில கிராமங்களில் மழையால் நெற்கதிர்கள் சாய்ந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான கிராமங்களில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.சேலம், நாமக்கல் போன்ற வெளி மாவட்டங்களிலிருந்து அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன. விவசாயிகள் கூறுகையில், இயந்திரத்திற்கு ஒரு கட்டுக்கு ரூ.40 வாடகை கொடுக்கிறோம். அதே கட்டை ரூ.40க்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ