உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தலைமை தபால் நிலையம் பரமக்குடி மக்கள் ஆதங்கம்

தலைமை தபால் நிலையம் பரமக்குடி மக்கள் ஆதங்கம்

பரமக்குடி: பரமக்குடி தலைமை தபால் நிலையம் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நிலையில் போதிய சேவை கிடைக்காமல் மக்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.பரமக்குடி தலைமை தபால் நிலையத்திற்கு சொந்தமான இடம் தாலுகா அலுவலகம் அருகில் உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தபால் நிலையம் மற்றும் தந்தி அலுவலகம் இணைந்து இயங்கி வந்தது.இந்த கட்டடம் சேதமடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆற்றுப்பாலம் அருகில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே வாடகை கட்டடத்தில் இயங்குகிறது.தற்போதுள்ள அஞ்சலகத்தில் இடவசதி இல்லாததால் பல புதிய திட்டங்களை அஞ்சல் துறை செயல்படுத்தினாலும் அவற்றை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பழைய அஞ்சலக கட்டடம் மழையால் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் இதன் அருகில் செல்வோர் விபத்து அச்சத்தில் உள்ளனர்.எம்.பி., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. மேலும் பல்வேறு நிலைகளில் தபால் நிலையம் கட்டுவதற்கு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றாலும் தீர்வு காணாமல் உள்ளனர்.எனவே பரமக்குடி தலைமை தபால் நிலையத்தை தரம் உயர்த்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ