ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சுகாதாரக்கேடு
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உணவக கழிவு நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சமையலறை பகுதியில் வெளியேறும் கழிவு நீர் தேங்குவதால் நோயாளிகளுக்கு கூடுதல் நோய் பரப்பும் இடமாக உள்ளது.நோயாளிகளுக்காக சமையல் செய்யும் அறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்களில் ஏற்பட்ட சேதத்தால் செல்ல வழியின்றி அப்பகுதியில் தேங்குகிறது. கழிவு நீரால் இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகளின் நோயை தீர்க்கும் அரசு மருத்துவமனையே நோய்களை உருவாக்குவது மக்களிடையே அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.----------