கனமழையால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கும் தண்ணீர்
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்ற, ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடை கின்றன. ஒரு கி.மீ., பாசன மடை மூலம் 20 பாசனமடைகள் அமைந் துள்ளன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாய் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டாத தான் காரணமாக, கடந்த நான்கு மாதத்திற்கு முன்பே பெரிய கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டது. இதனால், பெரிய கண்மாயை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பெரிய கண்மாயில் தற்போது தண்ணீர் தேங்கி வருகிறது. வறண்டு கிடந்த கண்மாயில் தண்ணீர் தேங்கி வருவதால், விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் பெரிய கண்மாய்க்கு மழை நீர் வரும் வரத்து கால்வாய்களை சீரமைத்து முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி னர்.