உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உயர்கல்வி நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு  கருத்தரங்கம்

உயர்கல்வி நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு  கருத்தரங்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் உயர்கல்விபடிப்பதற்கான நுழைவுத்தேர்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்நடந்தது. முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். இயந்திரவியல்துறை தலைவர் தர்மபிரபாகரன் வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் அருணாச்சலம் பேசுகையில், 'கேட்'தேர்வு என்பது இந்தியாவில் நடைபெறும் தேசிய அளவிலான தேர்வாகும். ஐ.ஐ.டி., என்.ஐ.டி., சென்ட்ரல் யுனிவர்சிட்டிகளில் உயர் கல்விபெறுவதற்காக உருவாக்கப்பட்டது. மாணவர்களின் தொழில் நுட்பதிறமை, அறிவையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான தேர்வாகும்என்றார்.பேராசிரியர்கள் கட்டடவியல் துறை எஸ்தர், மின்னணுவியல் துறைஐஸ்வர்யா, பணியாளர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி