உயர்கல்வி வழிகாட்டி முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகமது சதக் கல்வியியல் கல்லுாரியில் 'நான் முதல்வன் உயர்வுக்கு படி' என்ற உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் துவக்கி வைத்து உயர்கல்வி பயில்வதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், தொழிலாளர், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை மூலம் உயர்கல்வி தொடர்வதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கினர் ராமநாதபுரத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 123 மாணவர்கள் கலந்து கொண்டதில் 79 பேர் உயர்கல்வியில் சேர்ந்தனர். பரமக்குடியில் அடுத்தக்கட்டமாக பரமக்குடி கல்வி மாவட்டம் சார்பில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் ஆக.,28 ல் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சங்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் கணேச பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், முகமது சதக் கல்வியில் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.