உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உயர் கல்வி வழிகாட்டுதல்

உயர் கல்வி வழிகாட்டுதல்

திருவாடானை: திருவாடானையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவாடானை ஆண்கள், பெண்கள், தொண்டி ஆண்கள், பெண்கள், எஸ்.பி.பட்டினம், பாண்டுகுடி, மங்களக்குடி ஆகிய ஏழு அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 228 மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவாடானை அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். தொண்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் போன்ற பல்வேறு விளக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் பேசினர். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கார்த்திக் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ