உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஹிந்து முன்னணி பிளக்ஸ் பேனர் கிழிப்பு: 2 பேர் கைது 

ஹிந்து முன்னணி பிளக்ஸ் பேனர் கிழிப்பு: 2 பேர் கைது 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் காந்தாரியம்மன் கோயில் தெரு ரவி மகன் பாலமுருகன் 28. ஹிந்து முன்னணி நகர செயலாளரான இவர் பொங்கல் விழா வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர் அவரதுதெருவில் வைத்திருந்தார். அதே பகுதியை சேர்ந்த நக்கீரன் மகன் பிரகாஷ் 24,சுரேஷ்குமார் மகன் குமரன் 29, ரவி மகன் ஆனந்தபாபு ஆகியோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து அந்த பிளக்ஸ் பேனரில் தங்களது படம் இடம் பெறவில்லை என தெரிவித்து பிளக்ஸ் பேனரை கத்தியால் கிழித்தனர். பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பஜார் போலீசார் பிரகாஷ், குமரனை கைது செய்து, ஆனந்தபாபுவை தேடுகின்றனர்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ