ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் புதிய நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வக்கீல் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மதுரை முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார்.நிர்வாகிகள் பூப்பாண்டியபுரம் சேர்மன், கிஷோர், காளீஸ், திருவருட்செல்வம், சரவணன் உட்பட ஏராளமான ஹிந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.