உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளம்பெண் தற்கொலையில் கணவர் போக்சோவில் கைது

இளம்பெண் தற்கொலையில் கணவர் போக்சோவில் கைது

கமுதி; கமுதி அருகே சிங்கபுலியாம்பட்டியை சேர்ந்த தமிழ்பாண்டி மகன் மணிகண்டன் 26. மூலக்கரைபட்டி சேர்ந்த பெரியசாமி மகள் ஜெயசக்தி 16. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 7 மாதக் குழந்தை உள்ளது. ஜூன் 10ல் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயசக்தி துாக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து கமுதி வி.ஏ.ஓ., பாண்டி புகாரில் கமுதி போலீசார் சந்தேக மரணம், சிறுமியை திருமணம் செய்த மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில்வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி