உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை 

தொண்டி தொண்டி பெருமானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 60. சுமை துாக்கும் தொழிலாளி. இவரது மனைவி அமரஜோதி 59. இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்களுக்கு முன்பு அமரஜோதி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் கவலையடைந்த கணேசன் இரு நாட்களுக்கு முன்பு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீட்டிலிருந்து நேற்று காலை துர்நாற்றம் வரவே அருகிலிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தொண்டி போலீசார் சென்று கதவை உடைத்து கணேசன் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை