உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடற்புழு ஒழிப்பு பயிற்சி முகாம்

குடற்புழு ஒழிப்பு பயிற்சி முகாம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் தேசிய குடற்புழு ஒழிப்பு நாள் நடைபெற உள்ளது. இது தொடர்பான பயிற்சி முகாம் கீழ்த்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. வட்டார டாக்டர் திவான் முகையதீன் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன் வரவேற்றார்.முகாமில் குழந்தைகள், வளரிளம் பெண் குழந்தைகள், கர்ப்பிணிக்கு குடற்புழு பாதிப்பால் ஏற்படும் சத்து குறைபாடு பிரச்னைகள் குறித்தும் அவற்றை நீக்க அல்பென்ட்சோல் குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை