உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கட்டுமான தொழில் பாதிப்பு

கட்டுமான தொழில் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் அரசு மற்றும் தனி நபர்களின் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். மழைக்காலங்களில் கட்டடங்களின் உள்பகுதியில் பூச்சு பணிகளை தொழிலாளர்கள் மேற்கொள்வது வழக்கம். ஆனால் சில நாட்களாக தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடிய சூழல் இல்லாத நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முழுமையாக தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை