உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவிலில் மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் காயம் டாக்டர் இல்லை என புகார்

நயினார்கோவிலில் மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் காயம் டாக்டர் இல்லை என புகார்

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவிலில் தற்காலிக ஊழியர் மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது என மக்கள் புகார் தெரிவித்தனர்.நயினார்கோவில் ஒன்றியம் சிறகிகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு மகன் அஜித்குமார் 27. இவர் நேற்று காலை 9:30 மணிக்கு நயினார்கோவில் சந்தை அருகில் இரட்டை போஸ்ட்டில் ஏறி மின்கம்பிகளை பழுது பார்த்தார்.அப்போது மின்கசிவு ஏற்பட்டு முதுகு பகுதியில் தீக்காயங்களுடன் கீழே விழுந்தார். அவரை நயினார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு 9 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில், 2 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை