மேலும் செய்திகள்
அவிநாசி கோவிலில் திரண்ட பக்தர்கள்
21-Oct-2025
மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களிடம் பூஜை பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்வதால் அறநிலையத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடி, சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் பல ஆண்டுகளாக கோயில் 3ம் பிரகாரத்தில் தீர்த்தம் வாரி ஊற்றும் சங்கத்தினர் மற்றும் தனியார் புரோகிதர்கள் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு சிறப்பு பூஜை செய்து பணம் வசூலித்தனர். ஆனால் பக்தர்களிடம் அதிக பணம் வசூலிப்பதாக கோயில் இணை கமிஷனர் செல்லத்துரைக்கு புகார் சென்றதால் இரண்டு மாதங்களுக்கு முன் 3ம் பிரகாரத்தில் பூஜை செய்ய தடை விதித்தார். இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரியிடம் ஆளும் கட்சியினர் அழுத்தம் கொடுத்து மீண்டும் பிரகாரத்தில் பூஜை நடத்த அனுமதி கோரினர். ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில் சில நாட்களாக கோயில் கிழக்கு நுழைவு வாசல் வளாகம், மகாலட்சுமி சன்னதி முன்பு பக்தர்களுக்கு தனியார் புரோகிதர்கள் நின்றபடி பூஜை செய்து பணம் வசூலிக்கின்றனர். இந்த பூஜை, பாரம்பரிய முறைப்படி நடத்தாமல், ஏனோ, தானோ என நடப்பதால் பக்தர்கள் பணம் கொடுத்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மேலும் கோயிலுக்குள் நடக்கும் பூஜையால் அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அனுமதியின்றி நடக்கும் பூஜைக்கு தடை விதித்து, பக்தர்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.
21-Oct-2025