உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமப்புறங்களில் முழுமை பெறாத ஜல் ஜீவன் திட்டம்: குடிநீர் கேள்விக்குறி பரமக்குடி அருகே மக்கள் தவிப்பு

கிராமப்புறங்களில் முழுமை பெறாத ஜல் ஜீவன் திட்டம்: குடிநீர் கேள்விக்குறி பரமக்குடி அருகே மக்கள் தவிப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் திட்டம் முழுமை பெறாததால் மக்கள் சோகத்தில் உள்ளனர்.ஜல் ஜீவன் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பணி நிறைவு பெறாமல் பாதியில் இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்கள் அமைத்தும் தண்ணீர் வழங்க முடியாத சூழல் நீடிக்கிறது. ராமநாதபுரம் சுற்றுவட்ட பகுதி மக்கள் இன்றளவும் குடிநீருக்கு அலையும் சூழல் அதிகரித்துள்ளது. பல இடங்களில் அமைத்த குழாய்களும் காட்சி பொருளாகவே உள்ளது.ஆகவே ஜல் ஜீவன் திட்டத்தை வேகப்படுத்தி அனைத்து வீடுகளுக்குமான குடிநீர் வழங்கும் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை