மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
13 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
13 hour(s) ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு வணிக நிறுவனங்களில் அதிகரித்துள்ளது.தழகத்தில் மண்வளத்தை பாதுகாக்கவும், சுகாதாரம் பேணவும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட 40 மைக்ரானுக்கு குறைவான பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு சில ஆண்டுகள் முன்பு தமிழக அரசு தடை விதித்தது.பிளாஸ்டிக் மாற்றாக பொதுமக்கள் மஞ்சப்பை திட்டத்திற்கு மாற வேண்டி அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல்கள், மளிகை கடைகள், பெட்டிக் கடைகள் என அனைத்து கடைகளிலும் தாராளமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் புழக்கத்தில் உள்ளன.பெயரளவில் அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்வதும், அதன் பின் கண்டு கொள்ளாத நிலையால் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. இரவு நேர ஓட்டல்களில் வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago