ஆட்டோ பெர்மிட் வழங்க வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே அக்காமடம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய இடங்களை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் வாகன அனுமதி பெர்மிட் வழங்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: அக்காமடம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய இடங்களில் 1000த்திற்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நுாறுக்கும் மேற்பட்டபவர்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலைமையில் தங்கச்சிமடம், பாம்பனுக்கு பெர்மிட் தருவது இல்லை. இதனால் ஆட்டோ தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தங்கச்சிமடம், பாம்பன் பெர்மிட் போக்குவரத்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.