உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

கீழக்கரை கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

கீழக்கரை : கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இரு நாட்கள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான புதுமையான யுக்திகளை ஆராய்ந்து அணுகும் முறை குறித்து இந்த கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் சுமையா வரவேற்றார். கனடா வின்னி பெக் பல்கலை சந்தைப்படுத்துதல் துறை பேராசிரியர் சத்யேந்திர சிங் முதல் அமைப்பில் கலந்து கொண்டு பேசினார்.சென்னை வண்டலுாரில் உள்ள பி.எஸ்.எம். அப்துார் ரகுமான் கிரசண்ட் அறிவியல் கல்லுாரி தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை வேந்தர் தாஜுதீன், கனடா பல்கலை பேராசிரியர் மீரா கவுர், ஜாம்பியா நாட்டு உத்கல் பல்கலை ஓய்வு பேராசிரியர் பசந்தகுமார், ஆஸ்திரேலியா மெல்போன் நகரின் பயிற்சி பேராசிரியர் சுல்தான் கலிபா ஹாரூன்.தமிழக அரசின் மாநில திட்ட குழு உறுப்பினர் சுல்தான் அகமது, காரைக்குடி அழகப்பா பல்கலை உயிரி எலக்ட்ரானிக்கல் துறை பேராசிரியர் சேகர், மதுரை காமராஜர் பல்கலை கடல் மற்றும் கடலோர ஆராய்ச்சித்துறை பேராசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர்.ராமநாதபுரம் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் பங்கேற்று சிறந்த கட்டுரைகளுக்கு விருதுகளை வழங்கினார். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவுத் கான் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை