உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டிக்கு அழைப்பு

காமராஜர் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டிக்கு அழைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் பேச்சு போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காமராஜர் பிறந்தநாள் விழா ஜூலை 15 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாளில் அவர் பிறந்த ஊரான விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வித் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாளில் அவரது வீட்டில் லட்ச தீபம் ஏற்றப்படவுள்ளது.தமிழகம், புதுச்சேரியில் 107 இடங்களில் மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 11ல் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகிறது.இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரை, 9,10 ம் வகுப்புகள், பிளஸ் 1, 2 ஆகிய மூன்று பிரிவுகளாக நடத்தப்படும்.இதில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு விருதுநகரில் ஜூலை 14 ல் மாநில அளவில் போட்டி நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்கலாம் என நாடார் மகாஜன சங்கத்தின் கல்வி திருவிழா ஒருங்கிணைப்பாளர் குகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி