உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மல்லிகை பூ விலை சரிவு கிலோ ரூ.400க்கு விற்பனை

மல்லிகை பூ விலை சரிவு கிலோ ரூ.400க்கு விற்பனை

ராமநாதபுரம்: தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய இடங்களில் மல்லிகை பூ சீசனை முன்னிட்டு வரத்து அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் சந்தையில் விலை குறைந்து கிலோ ரூ.400க்கு விற்கப்படுகிறது.ராமேஸ்வரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தங்கச்சி மடம், மண்டபம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை நாற்று உற்பத்தி நடக்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு செல்கிறது.சீசன் காலத்தில் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.1500 முதல் ரூ.2000க்கு விற்கிறது. தற்போது சீசன் துவங்கியுள்ளதால் மண்டபம், தங்கச்சி மடம் ஆகிய இடங்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு மல்லிகை வரத்து அதிகரித்துள்ளது.இதே போல் மதுரை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் வரத்து உள்ளதால் விலை குறைந்துள்ளது. ராமநாதபுரம் வியாபாரி எம். விக்னேஷ் கூறுகையில் '' பங்குனி, சித்திரை, வைகாசி வரைமல்லிகை பூ சீசன் உள்ளது.கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரம் கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரை விற்ற மல்லிகை பூக்கள் தற்போது கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை தரத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை