மேலும் செய்திகள்
ரோடு அமைக்கக்கோரி வழக்கு
19-Nov-2024
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி அழகர்சாமி, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கமுதக்குடியில் கழிவுநீர் கால்வாய் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கமுதக்குடி ஊராட்சி தலைவரின் கணவர் முறைகேட்டில் ஈடுபடுகிறார். கலெக்டர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.ஊராட்சியில் நான்கரை ஆண்டுகளில் நடந்த திட்டப் பணி, கணக்குகளை ஆய்வு செய்ய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை கலெக்டர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
19-Nov-2024