உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சிக்கல்: சிக்கல் அருகே ஆய்குடி கிராம பொதுமக்கள் மற்றும் தேசிய பறவை கபடி குழு நடத்திய 13ம் ஆண்டு கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு வென்ற ஆய்குடி தேசிய பறவை கபடிக்குழுவுக்கு ரூ. 20 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்ற இளையான்குடி அணிக்கு ரூ.18 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற எஸ். வாகைகுளம் அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டி வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு பா.ஜ., கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். சிறைக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி, அ.தி.மு.க., கிளை தலைவர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை