மேலும் செய்திகள்
பழநியில் கந்த சஷ்டி அக்.22 ல் துவக்கம்
15-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான பெருவயல் கிராமத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளது. இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று (அக்.,22) மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, அபிஷேக ஆராதனையுடன் காப்புக்கட்டுதல் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை சுவாமி உள்பிரகாரம் உலா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,27 ல் சூரசம்ஹாரம், அக்., 28ல் திருக்கல்யாணம் நடக்கிறது, கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.--
15-Oct-2025